
பகலிலே நிலவு தெரியாது...
யாரோ சொல்லி கேட்டிருந்தேன்!
உன்னை இன்று காலை சந்தித்ததாலே
அந்த கூற்று பொய்யானது!














சிறியதொரு கல்லாய்
பெரியதொரு சமுத்திரத்தில் இருக்கும்
இன்றைய இளைஞரே!
உங்கள் உணர்வில்,
உத்வேகமும் உண்டு!
விவேகமும் உண்டு!
வேதத்தில் வரும்,
தர்மமும் உண்டு!
நீ என்?
இதை செய்ய வேண்டுமென்று எண்ணாமல்,
எதையாவது செய்ய வேண்டுமென்று எண்ணுகிறாய்? -
யோசி!
நீ என்?
பெற்றோரிடம் அன்பு கொள்ளாமல்,
அறியாமையால்
உரிமை கொள்கிறாய்?
யோசி!
(அன்பினால் வரும் உரிமையல்ல!
உறவினால் வரும் உரிமை!)
வேண்டும் ஒரு வெற்றி
என்றெண்ணாமல்.
வேண்டாம் ஒரு தோல்வி,
என்றெண்ணாதே!
அப்போது,
உன் எண்ணம் தெளிந்தால்,
உன் வார்த்தைகள் முத்தாகும்!
எழுத்துக்கள் பவளமாகும்!
மாற்றி யோசி என்று
கூறும் என் கூற்றை
பற்றி யோசி!