17.8.08

நட்பு தரும் சுதந்திரம்!



மழை வருமுன்னே-
மண்வாசனை வரும்!

வாசம் தரும் சுகம் தனை மழை கொடுக்குமா?

காதல் வருமுன்னே,
நட்பு தானே வரும்!

நட்பு தரும் சுதந்திரம் காதல் கொடுக்குமா?

சுற்றினேன்!



சூரியனை சுற்றும் பூமி போல்!
பூக்களை சுற்றும் வண்டுகளைப் போல்!
உன்னை கண்ட நாள் முதல்,
உன்னைச் சுற்றி அலைந்தேன் - பெண்ணே!

இன்றும், அலைகிறேன் உன்னைச் சுற்றியல்ல,
உனது பெயரை கொண்ட எனது மகளைச் சுற்றி!