21.7.08

இருவர் உள்ளம்!



ஆண்:

ஏன் இந்த மற்றம்?
என் மனம் என்னை கேட்டது!
நீ தந்த மாற்றம்!
என் மனமே பதிலும் சொன்னது!

ஆண்:

உன்னை சந்தித்த நொடி- நான்
என்னை மறந்தேன் - நீ
என்னை சிந்தித்த நொடி- தான்
விண்ணை அளந்தேன்!

காதலெனும்....காதலெனும்....
தீயை ஏற்றினாய் என்னுள்!
மோதலெனும்....மோதலெனும்....
தெய்வம் போற்றுவேன் - என்றும்!

பெண்:

என்ன சொல்கிறாய் அன்பே?
உனது காதலா?- இல்லை....
நமது காதலா?

நீயே என்னுள் உறைந்திடும் போது-
பேதம் எதற்கு?

ஆண்:

நீயும் நானும் ஒன்றான போது-
நாம் எதற்கு?

பெண்:

அன்னை பெற்ற நொடி-நான்
மண்ணை அடைந்தேன்-நீ
என்னைப் பெற்ற நொடி-தான்
பெண்மை அடைந்தேன்!

அன்பென்னும்.... அன்பென்னும்....
சேயை போற்றுவோம்... என்றும்!
காதலெனும்.... காதலெனும்....
தாயை போற்றுவோம்-என்றும்!

ஆண்:

உண்மை சொல்கிறாய் அன்பே!
நமது காதலா?-இல்லை
உலகக் காதலே!

அன்பை பரிமாறும் போது-
சொற்கள் எதற்கு?

பெண்:

காதல் பரிமாறும் பொது,
கேள்வி எதற்கு?

(உன்னை சந்தித்த நொடி.......)

1 comment:

James Vasanthan said...

Ur poems are fantastic. Send me your songs which you have written for films. Let me tune them.