15.8.08

சுதந்திர நாடிது!




கொடியவர்க்கு வோட்டு!
அடியவர்க்கு தீட்டு!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

'சாதி'யை நினைத்தோம்,
சாதிக்க மறந்தோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

பெரியோரைப் புழகாமல்,சிறியோரை இகழாமல்,
கணியன் சொன்ன வாழ கண்டோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

வள்ளுவன் சொல் படித்து வாழ்வோம் - ஆயினும்,
வள்ளுவன் சொல் படி வாழ மாட்டோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

அரசியலை நினைத்த அரசியல்வாதிகள் - உண்ணும்,
அரிசியை மறந்தனர்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

போர் வீரர்களை கொண்டாட மறுத்தோம் - ஆயினும்,
விளையாட்டு வீரர்களை அணைத்தோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

அலைகள் அடித்தால் கண் கலங்குவோம் - அடித்த
அலைகள் ஓயுமுன்னே அதையும் மறந்தோம்!
சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!

'கள்ளநோட்டிலும் நானா?
லஞ்சப் பணத்திலும் நானா?
திருட்டுப் பணதில்லும் நானா?'
ரூபாய் நோட்டில் காந்தியின் சிரிப்பு -
இன்று புரிந்தது!

சுதந்திர நாடிது,
எங்கள் சுதந்திர நாடிது!