30.8.09

பகலிலே நிலவு!



பகலிலே நிலவு தெரியாது...
யாரோ சொல்லி கேட்டிருந்தேன்!
உன்னை இன்று காலை சந்தித்ததாலே
அந்த கூற்று பொய்யானது!

காதல் துயரம்!



வண்ண வண்ண கனவுகள்
இன்று
கருப்பு வெள்ளை ஆனது!

சின்ன சின்ன நினைவுகள்
இன்று
நெருப்பில் எரிந்த சாம்பல் ஆனது!

என் கனவு பெண்ணே
உன் நினைவை கொண்டே வாழ்வேன்!
என் கனவு பெண்னே
உன் கனவை கொண்டே வாழ்வேன்!

பிறந்தவுடன் நடக்க சொல்லி கொடுத்து யாரோ?
ஞாபகமில்லை எனக்கு!
வளர்ந்தவுடன் காதல் சொல்லித் தந்தது நீ தானே!
உன்னை மறக்கச் சொல்லித் தர மட்டும் மறுக்கிறாயே?
ஏன்? ஏன்? ஏன்?