
காலையில் எழுந்தேன்....
பள்ளிக்குச் சென்றேன்!
மாலையில் திரும்பினேன்!
இரவில் உறங்கினேன்!
இருபது வருடங்கள் கழிந்தன....
காலையில் எழுந்தேன்....
வேலைக்குச் சென்றேன்!
மாலையில் திரும்பினேன்!
இரவில் உறங்கினேன்!
நாற்பது வருடங்கள் கழிந்தன....
காலையில் எழுந்தேன்
மருந்துகள் உண்டேன்...
காலாற நடந்தேன்...
இரவில் உறங்கினேன்!
நாட்கள் தான் கழிய மறுக்கின்றன!
2 comments:
vary nice da
hm.. well written...
Post a Comment