
ஆண்:
உன்னை நினைத்தால்...
உன்
அன்பை நினைத்தால்...
என் உள்ளம் சிலிர்க்கும்!
பின் உடலும் சிலிர்க்கும்!
வண்ணக் கவிதை- ஒரு
சின்னக் கவிதை
நான் உன்னை எண்ணியே
வரைந்தேன்... நானும் வரைந்தேன்...
எழுதிய கவிதையை மெதுவாய்...
சொல்லிப் பார்த்தேன்...
உந்தன் பெயரைச் சொல்லும்...
சுகம் தான்- வரவில்லையே!
பெண்:
விண்ணை அளப்பேன்!
இந்த,
மண்ணை அளப்பேன்!
உந்தன்,
கண்ணை மட்டும் காண
எந்தன் உள்ளம் நடுங்கும்!
நடுக்கத்திலும், மனம் அதை தானே விரும்பும்!
ஆண்:
ஒரு பாவை பார்த்தும் திரும்பாத என்னை
திரும்ப வைத்தவள் நீ தான்!
ஒரு பார்வை பார்த்ததும் மனதில்,
விரும்ப வைத்தவள் நீ தான்!
பெண்:
ஒரு பார்வை காண தவிப்பேன்-
என்று நான்...
நினைக்கவில்லை-நம்பவில்லை!
உன் பார்வை கண்டு விழுந்தேன்-
விழுந்தும் ரசித்தேன்!
நான் விழுந்தது காதலுக்குள்!
2 comments:
though it ha the touch of all tamil songs, it sounds good.no offence meant
this was a song heavily inspired from kangal irandal... ;-)
Post a Comment