21.7.08

ஆண் வைரஸ்... பெண் நத்தை!!!




Chorus:


அவள் யார்? அவள் யார்?
அவள் யார்? அவள் யார்?
who is she????


Rap:

She is my love.... oh!oh!
She is my honey....ah!ah!
She is my life..... oh!oh!
She is my ah! ah! ah! ah!


சரணம் ஆண்:

அவள் யார் என்று சொல்ல, தமிழில் வார்த்தைப் பஞ்சம்!
அவள் யார் என்று சொல்ல, தமிழே என்னை கெஞ்சும்!
அவள் பேசுவதை கேட்டாலோ, தமிழே அவளைக் கொஞ்சும்!
அவள் அழகைப் பற்றி பார்த்தாலோ, அது நிலவையே மிஞ்சும்!-மிஞ்சும்!

ஓஹோ! ஓஹோ! ஒஹொஹோ!
ஆஹா! ஆஹா! அஹாஹா!


சரணம் பெண்:

அவன் யார் என்று சொல்ல மனதில் உண்டு அச்சம்!
அவன் யார் என்று சொல்ல, வார்த்தை இல்லை மிச்சம்!
அவன் நடந்து செல்வதைப் பார்க்க, விழிகள் என்னைக் கெஞ்சும்!
அவன் பேசுவதை கேட்டாலோ..... செவிகள் என்னை கொஞ்சும்! கொஞ்சும்!


பல்லவி ஆண்:

உடலை விட்டு நீங்கினால், வைரஸ் உயிரை இழக்கும்! உடலை மீண்டும் அடைந்தால், இழந்த உயிர் பிழைக்கும்!

நானும் வைரஸ் தான் கண்ணே!

உன்னை விட்டு நீங்கினால், உயிரை இழப்பேன்..... நான்!
உன்னை மீண்டும் அடைந்தால்! உயிர் பிழைப்பேன்.... நான்!


பல்லவி பெண்:

கூட்டை விட்டு நீங்கினால்... நத்தை உயிரை இழக்கும்!
கூட்டை மீண்டும் அடைய.... நத்தை உயிர் இருக்காது!

நானும் நத்தை தான் அன்பே....

உன்னை விட்டு நீங்கினால்... உயிரை இழப்பேன் நான்!
உன்னை மீண்டும் அடைய எந்தன் உயிர் இருக்காது!

Chorus:

உயிரை இழக்கும் பேச்சை விட்டு...
இனி, உயிரை வளர்ப்போம்!
......................................

0 வாசகர் எண்ணங்கள்!: